Sunday, July 31, 2011

தேவராட்டம்

தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் வடிவம் தேவராட்டம். குறிப்பாக தமிழ்நாட்டில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினரில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்ற சடங்கு.[1] எனலாம். இந்த ஆட்டத்தை தலைப்பில் தலைப்பா கட்டி, இடுப்பில் துண்டு கட்டி ஆடுவர். உருமி மேளம், பறை மேளம் ஆகியவை தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைக் கருவிகளாக இருக்கின்றன. கம்பளத்து நாயக்கர் எனும் சமூகத்தினரின் கோவில் விழாக்களிலும், வீட்டு விழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இதை ஒரு சடங்காகவே வைத்திருக்கின்றனர்.
கம்பளத்து நாயக்கர்களின் ஒரு பிரிவினரான சில்லவார்கள் என்பவர்கள் இவ்வாட்டத்தை ஆடுகிறார்கள். ஜக்கம்மா கோயிலில் சித்திரை மாதம் நிகழும் கொடை விழாவின்போதும் அவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளான திருமணம், பூப்புச் சடங்கு ஆகியவைகளிலும் முக்கிய நிகழ்வாக தேவராட்டம் நிகழ்கிறது. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே இவ்வாட்டத்தில் பங்குபெறுகின்றனர். இதன் அடவுகள் உறுமி இசைக்கேற்ப ஆடப்படுகிறது. தேவராட்டத்தில் மொத்தம் 34 வகையான அடவு முறைகள் உண்டு. ஆட்டம் மெதுவாகத்துவங்கி வேக கதியில் முடியும்.

தமிழர் ஆடற்கலை வடிவங்கள் - சிலம்பம்




சிலம்பம் ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை ஆகும். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்பாப்புக் கலை. முற்காலத்தில் இக்கலையை மறவர்கள் பயன்படுத்தினர். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன.

ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். (ஈட்டி, கத்தி, வாள்...). அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் சிலம்பு (நிலத்தில் இருந்து ஒரு ஆளின் நெற்றி புருவம் வரையான உயரமுடைய தடி).
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன
துடுக்காண்டம்
குறவஞ்சி
மறக்காணம்

பெரியமேளம்

பெரியமேளம் என்ற தோலிசைக் கருவியை இசைத்து ஆடுவதால் பெரிய மேளம் என்று அழைக்கப்படுகிறது. பெரிய மேளம் என்ற இசைக்கருவியோடு தமரு, சட்டி, தமுக்கு, ஜால்ரா ஆகிய கருவிகளும் இசைக்கப்படும். குறைந்தது ஏழுபேர் இக்கலையை நிகழ்த்துவர். இதை மேளசெட்டு என்பார்கள். பெரியமேளம் பத்து கிலோ எடைகொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அடி முறையையும் பாகம் என்கிறார்கள். மொத்தம் பத்துவிதமான பாகம் உண்டு. முதல் பாகத்தில் எல்லாவிதமான பாகங்களையும் முன்னோட்டமாக நிகழ்த்திக் காட்டுவார்கள். இரண்டாவது பாகம் என்பது எல்லா பொது விழாக்களின்போதும் மூன்றாவது பாகம் திருமண விழாக்களின்போதும் நான்காவது பாகம் கங்கையம்மனுக்குக் கூழ் ஊற்றும்போதும் ஐந்தாவது பாகம் வேகமான திரைப்படப் பாடலுக்கும் ஆறாம் பாகம் மாரியம்மனுக்குக் கூழ்வார்க்கும்போதும் பொங்கலின்போது ஏழாம் பாகமும் புலியாட்டத்திற்கு எட்டாம் பாகமும் ஒன்பதாம் பாகமும் வாசிக்கப்படுகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் இக்கலை பரவலாக நிகழ்த்தப்படுகிறது.

பாவை கூத்து

உயிரற்ற பாவைகளை உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் கூத்து பாவைக்கூத்து என்றழைக்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி மூலம் திரைச்சீலையில் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி நிகழ்த்துவது தோல்பாவை கூத்து. மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ‘கணிகர்’ சாதியின் உட்பிரிவான ‘மண்டிகர்’ சாதியைச் சார்ந்தவர்கள் இக்கலையை நிகழ்த்துகின்றனர். ஓலை அல்லது துணியால் வேயப்பட்ட சிறிய அறையே தோல்பாவைக் கூத்தின் அரங்கமாகும். இவ்வறையின் முன்பகுதியில் மெல்லிய வெள்ளைத் திரைச்சீலை கட்டப்பட்டிருக்கும். பாவைகளை இயக்கிக் கூத்தினை நடத்துபவர் இவ்வறையினுள் இருப்பார். அரங்கின் உள்பகுதியில் உள்ள வெண்திரையை ஒட்டி ஆட்டப்படும் பாவைகளின் மீது விளக்கின் ஒளி ஊடுருவும் போது பார்வையாளர்களுக்குப் பாவைகள் தெளிவாகத் தெரியும். பார்வையாளர்கள் மண் தரையில் அமர்ந்திருப்பர். கூத்தரங்கின் முன்பகுதியில் இசைக்கருவிகளை இசைப்பவர்களும் பின்பாட்டுப் பாடுபவர்களும் அமர்ந்திருப்பர். இக்கலைஞர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து கிளம்பி பல ஊர்களில் நிகழ்ச்சி நடத்தி மீண்டும் 6 மாதங்கள் கழித்து சொந்த கிராமத்திற்குத் திரும்புகின்றனர். ஆகவே இவர்கள் நாடோடிக் கலைஞர்களாகக் கருதப்படுகின்றனர்.

தமிழர் ஆடற்கலைகள் - தெருக்கூத்து

தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். கதைக்கேற்ற மாதிரி ஒப்பனை, கட்டையணி, உடைகள் அணிந்து நடிப்பர். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர். தற்காலத்தில் இக்கலை அருகி வருகிறது.

சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம் ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும்.

தெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக அன்றி கோவில் விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும் அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப் பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது.

காவடி




காவடி எனப்படுவது இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் முருகக் கடவுளிடம் நேர்த்தி செய்யும் பக்தர்களால் சுமக்கப்படும், முறைப்படி அழகாக அமைக்கப்பட்ட ஒருவகை பொருளாகும்.இவ்வகை காவடிகளை, இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், தமது பக்தியினை வெளிப்படுத்தும் முகமாக பயன்படுத்தப்படுகின்றனர்.
காவடியில் இருவகை உள்ளன. அவற்றுள் தூக்குக்காவடி எனப்படுவது, முற்கம்பிகளினை, ஒருவரின் முதுகுத் தோலில் குத்தி யெடுத்து, பின் வண்டியொன்றின் மீது ஏற்றி, அவரைச் சுமந்து ஊர்வலம் அழைத்துச் செல்வதாகும். பாற்காவடி இளம்வயதினரிலிருந்து, பெரியவர்வரை அனைவராலும் அதிகமாக ஆடப்படுகின்றது.




காவடியில் சில வகைகள்

பால் காவடி
பன்னீர்க் காவடி
மச்சக் காவடி
சர்ப்பக் காவடி
பறவைக் காவடி - தூக்குக் காவடி

பொம்மலாட்டம்

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்து இத்தாலி, இலங்கை, ஜாவா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இக்கலை பயணித்திருக்கிறது. இக்கலை, வட்டாரக்கலையோ, சடங்கியலாக நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. இது மரபுவழிக்கலை. பொம்மலாட்டக் கலையை நிகழ்த்துவோர் தற்போது 2 - 3 குடும்பங்கள் மட்டுமே; தோல் பாவைக்கூத்தை நிகழ்த்துவோர் மதுரை, கன்னியாகுமரி, கோவில்பட்டி, தேனி மாவட்டங்களிலும் சென்னை அருகிலும் மிகக்குறைவான அளவிலே வசிக்கிறார்கள். [1] இக்கலையில் பிராமணர்கள் முக்கியப் பங்கு வகிப்பதுண்டு (?). பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு. எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில், கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபு.

தமிழ்நாட்டில் பொம்மலாட்டம் என்றழைக்கப்படும் இக்கலை, ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் சூத்ரதா கொம்பயேட்டா எனவும் ஒரிசாவில் கோபலீலா எனவும் மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும் அசாமில் புதலா நாச் எனவும் ராஜஸ்தானில் காத்புட்லி எனவும் மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி பஹுல்யா எனவும் அழைக்கப்படுகின்றது. [2] ஆங்கிலத்தில் பொம்மலாட்டத்தை மேரியோனெட்டு (marionette)என்பர்.

பொருளடக்கம் [மறை]
1 பொம்மலாட்ட முறை
2 பொம்மைகள்
3 பொம்மையை இயக்கும் முறை
4 பொம்மலாட்டம் பற்றி வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்
5 இயந்திர மனிதர் ஆட்டம்
6 ஆதாரங்கள்
7 வெளி இணைப்புகள்
[தொகு]பொம்மலாட்ட முறை

பொம்மலாட்டத்தில் மொத்தமாக 9 கலைஞர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்குவார்கள். மற்றைய 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார். ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும். தற்போது சிலர் மின் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபுரீதியாக இந்தக் கலை நிகழ்த்தப்படும். அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்புறத்தில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை, பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும்.

பொம்மைகள்

பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை என அழைக்கப்படும் மரத்தில் இருந்து செய்கிறார்கள். இந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்துப் பின் உலர வைத்து தலை, கால், கை என பொம்மையின் உருவங்களை தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள். இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும். இந்த பொம்மைகள் 45 செ.மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை உயரமுடையதாக இருக்கும். பொம்மையின் உறுப்புகளுக்கு ஏற்பவும், பாத்திரங்களின் தன்மைக்கேற்பவும் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவார்கள். ஆரம்பகாலங்களில் எல்லாப் பொம்மைகளுக்கும் மஞ்சள் வண்ணம் மட்டுமே தீட்டப்பட்டது. தற்போது கற்பனைக்கும் பொம்மைகளின் வசீகரத்துக்கும் ஏற்ப பல வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. மரபுரீதியான கதாபாத்திரங்களுக்கு அதற்கேற்றதான மரபுரீதியான உடைகளும், சமூகக் கதைகளில் பாத்திரமாக்கப்படும் பொம்மைகளுக்கு நவீன உடைகளும் அணிவிக்கப்படும்.

பொம்மையை இயக்கும் முறை

பொம்மையை இயக்குவதில் சில வகைகள் உண்டு. பொம்மையின் உறுப்புகளில் கயிறுகளைப் பிணைத்து, ஒரு குச்சியில் கட்டி, அந்தக் குச்சியை அசைத்து இயக்குவது ஒரு வகை. பொம்மையின் உறுப்புகளில் கயிறுக்குப் பதில் கம்பிகளைப் பிணைத்து, அவற்றை ஒரு வளையத்தில் இணைத்து பொம்மையை இயக்கும் கலைஞர் தனது தலையில் அதை மாட்டிக்கொண்டு இயக்குவது இன்னொரு வகை. பொம்மையை இயக்குபவர் திரைக்குப் பின்னே இருப்பார். அவர் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரிய மாட்டார். மேலும் கீழும் ஆட்டுதல், பக்கவாட்டில் ஆட்டுதல் என இருவகைகளில் பொம்மைகள் இயக்கப்படும். உயிர் அற்ற பொம்மைகள் உயிர் பெற்றுத் திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களை லயிக்கச் செய்வதே இந்தக் கலையில் எதார்த்தமான தன்மையாக உள்ளது.

இக்ககலையில் இரண்டு பாணிகள் பின்பற்றப் படுகின்றன. 1. கும்பகோணம் கலை பாணி. 2. சேலம் கலைபாணி. கும்பகோணம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் கர்நாடக இசையை ஒட்டிப் பாடல்களைப் பாடுவார்கள். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் போக்கை கையாளும் இவர்கள் பொம்மைகளில் கம்பிகளை பிணைத்துக் கொள்கிறார்கள். சேலம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் ஆர்மோனியத்தைத் தவிர்த்து முகவீணையைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கயிறுகளில் பொம்மைகளைப் பிணைத்துக் கொள்கிறார்கள்.
பொம்மலாட்டம் பற்றி வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்

“ இவ்வளவு கவனமும் ஆதரவும் பெறாவிட்டாலும், இன்னமும்கோவில் சார்ந்து இருப்பதால், பொம்மலாட்டம் ஒரு சில இடங்களில் ஜீவித்திருக்கிறது. ஆனால் பொம்மலாட்டக்காரர்கள் அதையே சார்ந்து இருக்கமுடிவதில்லை. நிலமோ அல்லது வேறு எதுவுமோ தான் அவர்களுக்கு ஆதரவு. நாடகம் தோன்றியபோதே தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற கிராமியக் கலைகள் ஆதரவிழக்கத் தொடங்கிவிட்டன. சினிமாவும், தொலைக்காட்சியும் அனேகமாக எல்லாக் கிராமியக்கலைகளையும் அழித்து விட்டன என்று தான் சொல்லவேண்டும். தோல் பொம்மலாட்டம் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் 10- நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் அது தன் கடைசி மூச்சில் விழுந்து கிடக்கிறது என்று தான் சொல்லவேண்டும். மரப்பாவைக்கூத்து கோவில் சார்ந்திருப்பதால் கிடைக்கும் கொஞ்சம் ஆதரவும் தோல் பொம்மலாட்டத்திற்கு இல்லை. ”