Sunday, July 31, 2011

ஜிக்காட்டம்

ஜிக்காட்டம் தமிழர் ஆட்டக்கலைகளுள் ஒன்றாகும். இந்த ஆட்டத்திற்கான பெயர் முன்பு ஜிக்குஅடி என்று அழைக்கப்பட்டது. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இசைக்கருவியை வாசித்தல் என்ற தன்மை மட்டும்தான் இருந்தது அதற்குப் பிற்காலத்தில் இசைக்கேற்ப ஆட்ட முறையையும் சேர்த்துக் கொண்டு ஆடியதால் ஜிக்காட்டம் என்று பெயர்பெற்றது. இசையின் ஒலி நயத்தைக் கொண்டு (ஜக்கு, ஜிக்கு) ஜிக்காட்டம் என்று பெயர் பெற்றது. ஐந்து வகையான ஆட்டமுறைகள் இவர்களிடம் உள்ளது. தப்பாட்டம் (தப்பை கையில் வைத்துக்கொண்டு ஆடுதல்), தெம்மாங்கு (கையில் துணியை வைத்துக்கொண்டு ஆடுவது), ஒயிலாட்டம் (கையில் கோல் வைத்துக்கொண்டு ஆடுவது), டிஸ்கோ முறையில் ஆடுவது. இந்த ஆட்டத்தை எட்டுப் பேர் மட்டுமே ஆடுகின்றனர். பதினோறு பேர் இசைக்கருவிகள் வாசிப்பவர்களாக உள்ளனர். பல்வேறுவகையான ஆட்ட அடவுமுறைகள் உண்டு. விசில் ஒலிக்கேற்ப அடவுமுறைகள் மாறும். நகரி, உருட்டு குண்டா, ஜால்ரா, தப்பு, கோல், விசில் ஆகியன இசைகருவிகளாகப் பயன்படுகின்றன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் இக்கலைஞர்கள் அதிகம் உள்ளனர். இந்த ஆட்டகலையானது நாட்டார் கோயில் சார்ந்த சடங்கியல் நிகழ்வுகளோடு நெருங்கிய தொடர்புடையது. தொழில் இல்லாத நாட்களில் இக்கலைஞர்கள் விவசாயப் பணிகளுக்குச் செல்கின்றனர்.

புலி ஆட்டம்

புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர்.
இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது.
புலி ஆட்டத்தை ஒத்து கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்களும் உண்டு.

தேவராட்டம்

தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் வடிவம் தேவராட்டம். குறிப்பாக தமிழ்நாட்டில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினரில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்ற சடங்கு.[1] எனலாம். இந்த ஆட்டத்தை தலைப்பில் தலைப்பா கட்டி, இடுப்பில் துண்டு கட்டி ஆடுவர். உருமி மேளம், பறை மேளம் ஆகியவை தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைக் கருவிகளாக இருக்கின்றன. கம்பளத்து நாயக்கர் எனும் சமூகத்தினரின் கோவில் விழாக்களிலும், வீட்டு விழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இதை ஒரு சடங்காகவே வைத்திருக்கின்றனர்.
கம்பளத்து நாயக்கர்களின் ஒரு பிரிவினரான சில்லவார்கள் என்பவர்கள் இவ்வாட்டத்தை ஆடுகிறார்கள். ஜக்கம்மா கோயிலில் சித்திரை மாதம் நிகழும் கொடை விழாவின்போதும் அவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளான திருமணம், பூப்புச் சடங்கு ஆகியவைகளிலும் முக்கிய நிகழ்வாக தேவராட்டம் நிகழ்கிறது. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே இவ்வாட்டத்தில் பங்குபெறுகின்றனர். இதன் அடவுகள் உறுமி இசைக்கேற்ப ஆடப்படுகிறது. தேவராட்டத்தில் மொத்தம் 34 வகையான அடவு முறைகள் உண்டு. ஆட்டம் மெதுவாகத்துவங்கி வேக கதியில் முடியும்.

தமிழர் ஆடற்கலை வடிவங்கள் - சிலம்பம்




சிலம்பம் ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை ஆகும். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்பாப்புக் கலை. முற்காலத்தில் இக்கலையை மறவர்கள் பயன்படுத்தினர். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன.

ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். (ஈட்டி, கத்தி, வாள்...). அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் சிலம்பு (நிலத்தில் இருந்து ஒரு ஆளின் நெற்றி புருவம் வரையான உயரமுடைய தடி).
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன
துடுக்காண்டம்
குறவஞ்சி
மறக்காணம்

பெரியமேளம்

பெரியமேளம் என்ற தோலிசைக் கருவியை இசைத்து ஆடுவதால் பெரிய மேளம் என்று அழைக்கப்படுகிறது. பெரிய மேளம் என்ற இசைக்கருவியோடு தமரு, சட்டி, தமுக்கு, ஜால்ரா ஆகிய கருவிகளும் இசைக்கப்படும். குறைந்தது ஏழுபேர் இக்கலையை நிகழ்த்துவர். இதை மேளசெட்டு என்பார்கள். பெரியமேளம் பத்து கிலோ எடைகொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அடி முறையையும் பாகம் என்கிறார்கள். மொத்தம் பத்துவிதமான பாகம் உண்டு. முதல் பாகத்தில் எல்லாவிதமான பாகங்களையும் முன்னோட்டமாக நிகழ்த்திக் காட்டுவார்கள். இரண்டாவது பாகம் என்பது எல்லா பொது விழாக்களின்போதும் மூன்றாவது பாகம் திருமண விழாக்களின்போதும் நான்காவது பாகம் கங்கையம்மனுக்குக் கூழ் ஊற்றும்போதும் ஐந்தாவது பாகம் வேகமான திரைப்படப் பாடலுக்கும் ஆறாம் பாகம் மாரியம்மனுக்குக் கூழ்வார்க்கும்போதும் பொங்கலின்போது ஏழாம் பாகமும் புலியாட்டத்திற்கு எட்டாம் பாகமும் ஒன்பதாம் பாகமும் வாசிக்கப்படுகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் இக்கலை பரவலாக நிகழ்த்தப்படுகிறது.

பாவை கூத்து

உயிரற்ற பாவைகளை உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் கூத்து பாவைக்கூத்து என்றழைக்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி மூலம் திரைச்சீலையில் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி நிகழ்த்துவது தோல்பாவை கூத்து. மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ‘கணிகர்’ சாதியின் உட்பிரிவான ‘மண்டிகர்’ சாதியைச் சார்ந்தவர்கள் இக்கலையை நிகழ்த்துகின்றனர். ஓலை அல்லது துணியால் வேயப்பட்ட சிறிய அறையே தோல்பாவைக் கூத்தின் அரங்கமாகும். இவ்வறையின் முன்பகுதியில் மெல்லிய வெள்ளைத் திரைச்சீலை கட்டப்பட்டிருக்கும். பாவைகளை இயக்கிக் கூத்தினை நடத்துபவர் இவ்வறையினுள் இருப்பார். அரங்கின் உள்பகுதியில் உள்ள வெண்திரையை ஒட்டி ஆட்டப்படும் பாவைகளின் மீது விளக்கின் ஒளி ஊடுருவும் போது பார்வையாளர்களுக்குப் பாவைகள் தெளிவாகத் தெரியும். பார்வையாளர்கள் மண் தரையில் அமர்ந்திருப்பர். கூத்தரங்கின் முன்பகுதியில் இசைக்கருவிகளை இசைப்பவர்களும் பின்பாட்டுப் பாடுபவர்களும் அமர்ந்திருப்பர். இக்கலைஞர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து கிளம்பி பல ஊர்களில் நிகழ்ச்சி நடத்தி மீண்டும் 6 மாதங்கள் கழித்து சொந்த கிராமத்திற்குத் திரும்புகின்றனர். ஆகவே இவர்கள் நாடோடிக் கலைஞர்களாகக் கருதப்படுகின்றனர்.

தமிழர் ஆடற்கலைகள் - தெருக்கூத்து

தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும். கதைக்கேற்ற மாதிரி ஒப்பனை, கட்டையணி, உடைகள் அணிந்து நடிப்பர். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர். தற்காலத்தில் இக்கலை அருகி வருகிறது.

சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம் ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும்.

தெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக அன்றி கோவில் விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும் அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப் பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது.

காவடி




காவடி எனப்படுவது இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் முருகக் கடவுளிடம் நேர்த்தி செய்யும் பக்தர்களால் சுமக்கப்படும், முறைப்படி அழகாக அமைக்கப்பட்ட ஒருவகை பொருளாகும்.இவ்வகை காவடிகளை, இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், தமது பக்தியினை வெளிப்படுத்தும் முகமாக பயன்படுத்தப்படுகின்றனர்.
காவடியில் இருவகை உள்ளன. அவற்றுள் தூக்குக்காவடி எனப்படுவது, முற்கம்பிகளினை, ஒருவரின் முதுகுத் தோலில் குத்தி யெடுத்து, பின் வண்டியொன்றின் மீது ஏற்றி, அவரைச் சுமந்து ஊர்வலம் அழைத்துச் செல்வதாகும். பாற்காவடி இளம்வயதினரிலிருந்து, பெரியவர்வரை அனைவராலும் அதிகமாக ஆடப்படுகின்றது.




காவடியில் சில வகைகள்

பால் காவடி
பன்னீர்க் காவடி
மச்சக் காவடி
சர்ப்பக் காவடி
பறவைக் காவடி - தூக்குக் காவடி

பொம்மலாட்டம்

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்து இத்தாலி, இலங்கை, ஜாவா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இக்கலை பயணித்திருக்கிறது. இக்கலை, வட்டாரக்கலையோ, சடங்கியலாக நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. இது மரபுவழிக்கலை. பொம்மலாட்டக் கலையை நிகழ்த்துவோர் தற்போது 2 - 3 குடும்பங்கள் மட்டுமே; தோல் பாவைக்கூத்தை நிகழ்த்துவோர் மதுரை, கன்னியாகுமரி, கோவில்பட்டி, தேனி மாவட்டங்களிலும் சென்னை அருகிலும் மிகக்குறைவான அளவிலே வசிக்கிறார்கள். [1] இக்கலையில் பிராமணர்கள் முக்கியப் பங்கு வகிப்பதுண்டு (?). பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு. எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில், கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபு.

தமிழ்நாட்டில் பொம்மலாட்டம் என்றழைக்கப்படும் இக்கலை, ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் சூத்ரதா கொம்பயேட்டா எனவும் ஒரிசாவில் கோபலீலா எனவும் மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும் அசாமில் புதலா நாச் எனவும் ராஜஸ்தானில் காத்புட்லி எனவும் மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி பஹுல்யா எனவும் அழைக்கப்படுகின்றது. [2] ஆங்கிலத்தில் பொம்மலாட்டத்தை மேரியோனெட்டு (marionette)என்பர்.

பொருளடக்கம் [மறை]
1 பொம்மலாட்ட முறை
2 பொம்மைகள்
3 பொம்மையை இயக்கும் முறை
4 பொம்மலாட்டம் பற்றி வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்
5 இயந்திர மனிதர் ஆட்டம்
6 ஆதாரங்கள்
7 வெளி இணைப்புகள்
[தொகு]பொம்மலாட்ட முறை

பொம்மலாட்டத்தில் மொத்தமாக 9 கலைஞர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்குவார்கள். மற்றைய 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார். ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும். தற்போது சிலர் மின் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபுரீதியாக இந்தக் கலை நிகழ்த்தப்படும். அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்புறத்தில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை, பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும்.

பொம்மைகள்

பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை என அழைக்கப்படும் மரத்தில் இருந்து செய்கிறார்கள். இந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்துப் பின் உலர வைத்து தலை, கால், கை என பொம்மையின் உருவங்களை தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள். இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும். இந்த பொம்மைகள் 45 செ.மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை உயரமுடையதாக இருக்கும். பொம்மையின் உறுப்புகளுக்கு ஏற்பவும், பாத்திரங்களின் தன்மைக்கேற்பவும் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவார்கள். ஆரம்பகாலங்களில் எல்லாப் பொம்மைகளுக்கும் மஞ்சள் வண்ணம் மட்டுமே தீட்டப்பட்டது. தற்போது கற்பனைக்கும் பொம்மைகளின் வசீகரத்துக்கும் ஏற்ப பல வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. மரபுரீதியான கதாபாத்திரங்களுக்கு அதற்கேற்றதான மரபுரீதியான உடைகளும், சமூகக் கதைகளில் பாத்திரமாக்கப்படும் பொம்மைகளுக்கு நவீன உடைகளும் அணிவிக்கப்படும்.

பொம்மையை இயக்கும் முறை

பொம்மையை இயக்குவதில் சில வகைகள் உண்டு. பொம்மையின் உறுப்புகளில் கயிறுகளைப் பிணைத்து, ஒரு குச்சியில் கட்டி, அந்தக் குச்சியை அசைத்து இயக்குவது ஒரு வகை. பொம்மையின் உறுப்புகளில் கயிறுக்குப் பதில் கம்பிகளைப் பிணைத்து, அவற்றை ஒரு வளையத்தில் இணைத்து பொம்மையை இயக்கும் கலைஞர் தனது தலையில் அதை மாட்டிக்கொண்டு இயக்குவது இன்னொரு வகை. பொம்மையை இயக்குபவர் திரைக்குப் பின்னே இருப்பார். அவர் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரிய மாட்டார். மேலும் கீழும் ஆட்டுதல், பக்கவாட்டில் ஆட்டுதல் என இருவகைகளில் பொம்மைகள் இயக்கப்படும். உயிர் அற்ற பொம்மைகள் உயிர் பெற்றுத் திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களை லயிக்கச் செய்வதே இந்தக் கலையில் எதார்த்தமான தன்மையாக உள்ளது.

இக்ககலையில் இரண்டு பாணிகள் பின்பற்றப் படுகின்றன. 1. கும்பகோணம் கலை பாணி. 2. சேலம் கலைபாணி. கும்பகோணம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் கர்நாடக இசையை ஒட்டிப் பாடல்களைப் பாடுவார்கள். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் போக்கை கையாளும் இவர்கள் பொம்மைகளில் கம்பிகளை பிணைத்துக் கொள்கிறார்கள். சேலம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் ஆர்மோனியத்தைத் தவிர்த்து முகவீணையைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கயிறுகளில் பொம்மைகளைப் பிணைத்துக் கொள்கிறார்கள்.
பொம்மலாட்டம் பற்றி வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்

“ இவ்வளவு கவனமும் ஆதரவும் பெறாவிட்டாலும், இன்னமும்கோவில் சார்ந்து இருப்பதால், பொம்மலாட்டம் ஒரு சில இடங்களில் ஜீவித்திருக்கிறது. ஆனால் பொம்மலாட்டக்காரர்கள் அதையே சார்ந்து இருக்கமுடிவதில்லை. நிலமோ அல்லது வேறு எதுவுமோ தான் அவர்களுக்கு ஆதரவு. நாடகம் தோன்றியபோதே தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற கிராமியக் கலைகள் ஆதரவிழக்கத் தொடங்கிவிட்டன. சினிமாவும், தொலைக்காட்சியும் அனேகமாக எல்லாக் கிராமியக்கலைகளையும் அழித்து விட்டன என்று தான் சொல்லவேண்டும். தோல் பொம்மலாட்டம் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் 10- நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் அது தன் கடைசி மூச்சில் விழுந்து கிடக்கிறது என்று தான் சொல்லவேண்டும். மரப்பாவைக்கூத்து கோவில் சார்ந்திருப்பதால் கிடைக்கும் கொஞ்சம் ஆதரவும் தோல் பொம்மலாட்டத்திற்கு இல்லை. ”

பாம்பாட்டம்

பாம்பு ஆட்டம் என்பது ஒரு தமிழர் ஆடற்கலை. பாம்பு போன்ற வேடம் அணிந்து, பாம்பின் அசைவுகளை போன்றும் இந்த ஆட்டம் அமைகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறும் பாம்பாட்டமும், இந்த நாட்டுப்புறக் கலையை அடிப்படையாகக் கொண்டதே.

கழியலாட்டம்

கழியல் ஆட்டம் தமிழர் ஆடற்கலைகளுள் ஒன்றாகும். கம்பு கழி என்றும் சொல்லப்படுவது உண்டு. என்வே கழியை கையில் கொண்டு ஆடுவதால் கழியலாட்டம் என்று பெயர்பெறுகிறது. மேலும் களியலாட்டம், கழலடி, களல் எனப்பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மலையாளத்தில் கோல்களி, கோலடிக்களி, கோலடி, கம்புக்களி, வெட்டும்தட என அழைக்கிறார்கள். இக்கலை போர்க்கலை, தற்காப்புக்கலை போன்ற தன்மையுடையது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இக்கலை உள்ளது. உவரியில் வாழும் பரதவர் இன மக்கள் இக்கலையை ஆடுகின்றனர். அதற்குப் பரதவர் கழியல் என்று பெயர். கழியல் ஆட்டம் தொடக்க நிலை, தயார் நிலை, சாதாரண நிலை, வேக ஆட்ட நிலை, மின்னல் வேக ஆட்ட நிலை, இறுதி ஆட்ட நிலை என ஆட்ட வகைகள் உண்டு. எட்டு, பத்து, பனிரெண்டு, பதினாறு என இரட்டைப்பட எண்ணிக்கையிலேயே ஆடுவர். ஏனெனில் இரண்டு இரண்டு பேர் ஒருவருக்கொருவர் எதிரெதிர் நிலையில் பார்த்துக்கொண்டு வட்டவடிவத்தில் நின்று ஆடுவர். பாடல்கள், இசைக்கருவிகளின் பின்னணி ஆகியவற்றிற்கு தக்கவாறு ஆடுவர். முதன்மையான இசையாக கழியல் கம்புகளிலிருந்து எழும் ஓசையே அமையும்.

மயில் ஆட்டம்





மயில் ஆட்டம் ஒரு தமிழர் நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாகப் பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர்.
மயிற்தோகையைப் பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளையும் மயிலாட்டம் (Peacock dance) என்று குறிப்பிடுவதுண்டு.

பறை ஆட்டம்

பறை ஆட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது. ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது. ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது. பறையைவிட அதிர்வு குறைந்த மெல்லிய இசைக்கருவிகளுக்கேற்ப பறையாட்டத்தின் வீரியமிக்க அசைவுகளை கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்ட நடனமே "சதிராட்டம்". 1930-களில் இதற்கு பரத நாட்டியம் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.[ஆதாரம் தேவை]

வரலாறு

விலங்குகளைக் கொன்று, தின்று மிஞ்சிப்போகும் தோலை எதிலேனும் கட்டிவைத்து, காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய ஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும், வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறி, திருமணம், இறப்பு, சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும இடம் பெறும் கலையாகியது. ஆரிய வருகைக்குப் பின் வருணாசிரம சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான, இசைக்கச் சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளை தங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் தொழில் சார்ந்த சாதியக் கோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும் சாதி சார்ந்து பிரித்து வைத்தது. அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறை ஆட்டம் ஒதுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி பலநூறு ஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்வி கிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்த தருணங்களில், அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறிய நவீன சமூகம், அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தை, சாவுமேளம் என என முத்திரை குத்தியது. ஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது சாதியக் குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட, அச்சமூகத்தின் விடுதலை வேட்கை கொண்ட இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாக கருதத் தொடங்கினர். இவ்விதம் மெல்ல, மெல்ல அக்கலை அழியும் நிலைக்கு வந்தது. சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு.

தப்பு என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு போர் இசைக்கருவியாகும். போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள். பறை, மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி செய்யப்படுகிறது. பறையினை இசைக்க இரண்டுவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது. இடது கையில் இருக்கும் குச்சி, சிம்பு குச்சி என்றும், வலது கையில் உள்ள குச்சி, அடிகுச்சி என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியான அடிகள் உண்டு. அவை சப்பரத்தடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல் அடி, மாரடித்தல் அடி, வாழ்த்து அடி என்பனவாகும். தமிழகத்தில் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது. ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினை பெண்களும் தற்போது ஆடி வருகின்றனர்.

சிறப்பு

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளன. சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என பல வகை அடிகள் உள்ளன. இக்கலைக்கெனப் பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர். நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் எனப் பார்வையாளனை ஈர்க்கத்தக்க இரசனை மிகுந்த கலையாடல்கள் இதில் உண்டு. தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடு துணைக்கருவியாகத் தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில் டிரம் பயன்படுத்துகிறார்கள்.


பறை ஆட்டம்
பெண்கள் பறை ஆட்டம்
சாவுப் பறை
கோயில் பறை
வண்டியில நெல்லு வரும்

பொய்க்கால் குதிரை ஆட்டம்



குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.[1] ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு.
இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம் ஒரிசாவில் சைத்திகோடா அல்லது கெயுதா என்றும், ஆந்திராவில் திலுகுர்ரம் என்றும், ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம் மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இக்கலை தமிழகத்தில் பரவலாக உள்ளது. இக்கலை கோயிலும் சமூகமும் சார்ந்த கலையாகும். முன்பு இந்த ஆட்டத்திற்கு கொந்தளம் என்ற இசைக் கருவியை பயன்படுத்தினர். தற்போது நையாண்டி இசைக்கேற்ப இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இக்கலையை ஆடுபவர்கள் ராஜா ராணி வேடம் பூண்டு ஆடுகிறார்கள்.

கொக்கலிக்கட்டை ஆட்டம்

மரத்தாலான நீண்ட கட்டைகளை காலில் கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டம் ஆகும். கொக்குகளின் நீண்ட கால்களைப் போல் காலில் கட்டும் கட்டை இருப்பதால் இதற்குக் கொக்குக் கால் கட்டை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. கங்கையம்மன் கோயில் விழாவோடு தொடர்புடையது. கங்கையம்மனின் அருளால் மட்டுமே ஆட்டத்தை ஆட முடியும் என்று நம்புகின்றனர். ஆடுபவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் இரட்டைப்படை எண்ணிக்கையிலேயே இருக்கும். தப்பு, சட்டி, டோலக் போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகிறது. ஆட்டத்திற்கு பயன்படுத்தும் கட்டை 60 செ. மீட்டர் முதல் 150 செ. மீட்டர் வரை உயரம் உடையதாய் இருக்கும். சிலர் 200 செ. மீட்டர் உயரமுள்ள கட்டைகளையும் பயன்படுத்துகின்றனர். கோயில் என்று மட்டுமல்லாமல் பல்வேறு பொதுநிகழ்விற்கும் விளம்பரத்திற்கும் தற்போது ஆடப்படுகிறது.

கும்மியாட்டம்

கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை. 'கும்மி' ஆட்டம் என்பது பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. [1]. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது.
[தொகு]
கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை பேணி கரகாட்டம் ஆடப்படும்.

கரகாட்ட வகைகள்


ஆட்ட கரகம் - பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.
சக்தி கரகம் - பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில் ஆடப்படுவது

Saturday, July 30, 2011

ஒயிலாட்டம்

ஒயிலாட்டம் என்பது ஒரே நிறத் துணியைத் தலையில் கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான குழு ஆட்டம். அழகு, அலங்காரம், சாயல், ஒய்யாரம் எனப் பல பொருள் தாங்கி நிற்கும் ஒயில் என்ற வார்த்தையே இவ் ஆட்டத்தின் பெயராகியுள்ளது. இது முற்றிலும் ஆண்கள் சார்ந்த கலை . ஆண்மையின் கம்பீரத்தை உணர்த்தும் இந்தக் கலையாட்டத்தில் பெண்களுக்கு இடமில்லை. இந்த ஆட்ட அடவுகள் ஆண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. பத்து முதல் 12 பேர் கொண்ட இந்த ஆட்டத்தில், எதிரெதிர் திசையிலோ, அல்லது நேர்த்திசையிலோ நின்று கொண்டு ஆடுவார்கள். சிறகை விரித்தால் மயிலாட்டம், சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம் என்று இக்கலையின் தன்மை வர்ணிக்கப்படுகிறது. பானைத்தாளம், தவில், சிங்கி, சோலக் போன்ற இசைக்கருவிகளை இந்த ஆட்டத்தில் பயன்படுத்துவதுண்டு. பானைத்தாளம் என்பது, குடத்தில் மாட்டுத்தோலைக் கட்டி இசைக்கப்படும் வல்லிசைக் கருவியாகும். பறைக்குப் பதிலாக இந்தக் கருவியை இசைக்கிறார்கள். இவைகளோடு கலைஞர்கள் காலில் அணிந்திருக்கும் சலங்கை இன்னுமொரு கருவியாக மாறி அடவுக்கேற்ப இசைக்கும். இந்த இசைக்கருவிகளைக் கட்டுப்படுத்தி வகைப்படுத்துவதே சிங்கி என்ற இசைக்கருவியின் வேலை. பாடலும், ஆடலும் நிறைந்த இக்கலையில், பாடத்தெரிந்தவருக்கு ஆடத்தெரிந்திருக்கத் தேவையில்லை. பாடலுக்குத் தகுந்தவாறு அடவு வைத்து ஆடற்கலைஞர்கள் ஆடுவார்கள். பெரும்பாலும் இராமாயணக்கதைகளே பாடல்களாகப் பாடப்படுகின்றன. இது தவிர பவளக்கொடி கதை, மதுரைவீரன் கதை, முருகன் கதை, சிறுத்தொண்டர் கதை, வள்ளி திருமணக் கதைகளையும் பாடி ஆடுவதுண்டு. ரெட்டியார் மற்றும் முக்குலத்தைச் சேர்ந்த சில இனத்தினர் இக்கலையை மரபு ரீதியாக நிகழ்த்தினர். இப்போது தலித்துகள் உள்ளிட்ட பிற இனத்தினரும் இக்கலையாடலில் ஈடுபடுகின்றனர். மரபுசார்ந்து இயங்கிய பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக, கிறிஸ்தவ ஆலயங்களிலும் அண்மைக்காலமாக இக்கலை நிகழ்த்தப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பைபிள் கதைகளைப் பாடி ஆடுகின்றனர்.
[தொகு]ஒயிலாட்ட முறைகள்

ஒயிலாட்டத்திற்கென்று தனித்த ஒப்பனை முறைகள் உள்ளன. ஒழுங்காகத் தலை வாரியிருப்பார்கள். கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு, வலது கையில் ஒரே வண்ணத்திலான கைக்குட்டை பிடித்திருப்பதும், தலையில் ஒரே வண்ணத்தில் துணிகளைக் கட்டியிருப்பதும் அவசியம். பெரும்பாலும் கையில் பிடித்திருக்கும் துணி சிவப்பு நிறத்தில் இருக்கும். தலைமையாளர் மட்டும் பச்சை நிறத்தில் பிடித்திருப்பார். வெள்ளை வேட்டியை தார் பாய்ச்சிக்கொள்வதும் மரபாகும். தொடக்கத்தில் கை கூப்பி, ஒரு காலை மட்டும் தட்டி கடவுள் வணக்கம் செய்து, அடுத்து தரையைத் தொட்டு அவை வணக்கம் செய்து விட்டு அடவுகளைத் தொடங்குவர். இடையிடையே களைப்பைப் போக்கிக் கொள்ள, பாடல் பாடும் அண்ணாவி விசிலடித்து ஆட்டத்தை நிறுத்திக் கொள்வார். பெரும்பாலும் ஒயிலாட்டக்குழுவின் தலைவரோ அல்லது வாத்தியாரோதான் அண்ணாவியாக செயல்படுவார். கடைசிப்பாடலுக்கு முன்னர் வாத்தியார் பார்வையாளர்களுக்கு நன்றி சொல்வார். கடைசி அடவு முடிந்ததும் அனைத்துக் கலைஞர்களும் பூமியைத் தொட்டு வணங்கிவிட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள். ஆதி காலத்தில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் இக்கலையாடலில் சிறந்த ஆண்களையே பெண்கள் மணம் முடிக்க விரும்பியதாக குறிப்புகள் உண்டு.
[தொகு]ஒயிலாட்ட இலக்கணம்

ஆட்டத்தின் வேகத்தைத் தீர்மானிக்க ஆட்ட இலக்கணங்களும் உண்டு. ஆட்டத்தின் வேகத்தைப் பொறுத்து தக்கு, காலம் என்றும் அடவுகளின் வேகத்தைப் பொறுத்து அடி, சாரி, தட்டு என்றும் வகைப்படுத்தியுள்ளனர். தக்கு என்பது மெதுவான ஆட்டத்திற்கான இலக்கணம். வேகமான அடவுகளுக்கு காலம் என்று பெயர். வேகமான அடவுகள் ஒன்றாம் காலத்தில் தொடங்கி மூன்றாம் காலத்தில் நிறைவுறும். வாத்தியார் பாடலைப்பாட, குழுவினர் அதே வரிகளைப் பாடி ஆடுவார்கள். மெதுவாகத் தொடங்கும் அடவுகள் மெல்ல, மெல்ல உச்சம் பெறும். தொடக்கம் முதல் இறுதிவரை கலைஞர்களின் அடவுகள் கம்பீரம் குறையாமல் இருக்கும். ஆட்டத்தின் எந்தத் தருணத்திலும் கலைஞர்களின் கழுத்துக்கு கீழே, இடுப்புக்கு மேலே உள்ள உடல்பகுதிகள் வளையக்கூடாது. ஒயிலாட்டம் ஆடும்போது காலில் கட்டிய சலங்கை "கெம்பீரிக்க வேண்டும்" என்பது நியதி.
ஆளோடு ஆளு
உரசாமல்
உங்கள் ஆளிலே ஒரு முழம்
தள்ளி நின்று
காலோடு காலு உரசாமல்
உங்கள் கைபிடித்துணி
தவறாமல்
மேலோடு மேலு
உரசாமல்
உங்கள் வேரூவை தண்ணி
சிதறாமல்.."
என்று நீளும் பாடல் ஒயிலாட்டத்தின் இலக்கணங்களை வரையறுக்கிறது.
மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்பூத்தூர் மாவட்ட கோவில் விழாக்களில் இப்போதும் அவ்வப்போது ஒயிலாட்டம் நிகழ்ந்து வருகின்றது. மதுரை குருநாதப்பிள்ளை, வாசகம் பிள்ளை ஆகியோர் இக்கலையில் குறிப்பிடத்தக்க கலைஞர்கள்.

பரதநாட்டியம்



பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றூம் மேலக்கடம்பூர்ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகளும் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், 'வழுவூர் ராமையா பிள்ளை,திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை', 'தனஞ்சயன்', 'அடையார் லக்ஷ்மணன்', 'கலாநிதி நாராயணன்' ஆகியோர் குறிப்படத்தக்கவர் ஆவர்.

Monday, July 11, 2011

Indian donors come together to scale social impact


Mumbai, June 15: Leading institutional, individual and corporate donors met at a confluence in Mumbai to take the first step towards forming a network by donors for donors.

The Philanthropy Leadership Confluence (PLC), organised by the Centre for Advancement of Philanthropy (CAP) and Samhita brought together a diverse set of individual donors, Indian and international foundations, sector intermediaries as well as social investors to debate and discuss how donors can collaborate to ensure that their funding creates the greatest social impact.

“It is more difficult to give money away intelligently than to earn it in the first place . Today, India has more HNI’s than ever before. But, are they giving or giving enough of their wealth? And, if not why? What are the barriers to giving? What are the challenges to giving? How can giving be made more effective?” says Noshir H. Dadrawala, Chief Executive of CAP

He expressed the need for better synergy among those in the ‘giving’ space in order to leverage impact and the need to share knowledge & learning – ‘what has worked and what has not worked so that the same mistakes are not repeated again and again.’

“Collaboration is essential to assemble the resources, expertise and influence required to solve problems as complex and critical as hunger, climate change and economic development. There is clear evidence that donors working together can create much more impact than the sum of their individual efforts says Priya Naik, CEO of Samhita.

“Our society rests on three pillars – Sarkaar (Government), Samaaj (civil society) and Bazaar (market forces). Since independence, we have seen several instances of the Samaaj suffering when either the Sarkaar or the Bazaar dominate. Philanthropy has a critical role to play in filling the gaps that the Sarkaar or the Bazaar cannot plug so that Samaaj can thrive,” says Rohini Nilekani, the Founder Chairperson of Arghyam and Pratham Books.

Examples of donors network are aplenty in the US and EU countries. The idea of forming a similar network in India, has been a point of discussion for decades now. PLC is a step in this direction.

“There are 80,000 private foundations in the US with annual grants of over 38.5 billion dollars. There are 110,000 public benefit foundations in 27 EU states with an estimated 153 billion euros in grant-making and expenditure. Support networks are essential to assist these foundations to be more impactful.” says Ms. Paula Johnson, the Vice President of The Philanthropic Initiative, while sharing her insight on global trends in philanthropic giving and networking.

“Worldwide Initiative for Grant-makers Support (WINGS) reported 200 foundations in India and grantmaking in India is about 5-7 billion  US dollars. The time is right for India to have a network that can support the work of donors and assist the new philanthropists,” Johnson added.

Johnson has played a key role in forming and advising similar networks worldwide and has offered to help the PLC define its mandate and activities.

“The world is moving towards co-creation and it plays a critical role in networks like these. Collaboration between individual donors, institutional donors and non-governmental organizations can help leverage shared resources and knowledge resulting in more powerful and sustained social impact,” says Vijay Mahajan, Chairman, BASIX and President, Micro Finance Institutions Network. The Micro Finance Institutions Network is an entity that plays a similar role in the micro finance sector.

The Confluence was an exercise to seek recommendations from a diverse set of donors and sector intermediaries on the goals and activities of the network and an invitation to help them co-create the network.

An informal task force has been formed to provide donors with information about each other’s work, engage and educate new philanthropists, build the capacity of institutional donors and their staff, lobby for more enabling law and policies for the social sector, facilitate collaboration and co-investment and build consensus around common standards of measuring the impact created by non-governmental organizations.

“Having a donor network seems like an idea whose time has come”, says Dadrawala.

The confluence not only had the right mix of stakeholders in the grant-making space but also people who displayed a high degree of engagement and commitment.